முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

உலக செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உலக செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சிறைவாசிகளுக்கு தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘செஞ்சிலுவை சங்கம் புயல், வெள்ள பாதிப்பு, இரு நாடுகளுக்கு இடையே போரின் போது பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிளை செய்து வருகிறது.

உலக செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு முன்னாள் சிறைவாசிகளின் நன்னடத்தை கருத்தில் கொண்டு 10 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதமுள்ள பொருட்கள், இரண்டு பேருக்கு தையல் இயந்திரங்கள், வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, மண்டல நன்னடத்தை அலுவலர் காஜா கமாலுதீன், நன்னடத்தை அலுவலர் சரவணன், செஞ் சிலுவை சங்க பொருளாளர் உதயசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்