கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் இ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று 2-வது அலைதமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்களின் உயிரைப்பறித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை
நோயாளிகளில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மாநில அரசின் அனுமதியின்றி, வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதனால், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புள்ள தொழிற்சாலைகள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க...
அதேபோல, மறைமலை நகர் மற்றும் மகேந்திரா சிட்டி தொழிற்பேட்டை வளாகங்களில் உள்ள பல தொழிற்சாலை களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிகிறது. எனவே, அணுமின் நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago