சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு 9 ஆயிரம் டோஸ்கோவிஷில்டு தடுப்பூசி வந்தடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி இல்லாததால் 2 நாட்கள் அந்த பணி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, உதகை அரசு தலைமை மருத்துவமனை, உதகை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் நடைபெற்றது.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் தினமும் 1,300 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது 1,700 பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள், ஒரே நாளில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக கருவிகள் வரவழைக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 9 ஆயிரம் டோஸ் கோவிஷில்டு தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில்இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 649 பேரிடம் சளி மாதிரி சேகரித்துகரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago