குறிஞ்சிப்பாடி அருகே - கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி :

By செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி அருகே கோயில் நிலத்தை அபகரிக்க நடந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்அருகே இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான புத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 8 சென்ட் இடம்எல்லப்பன்பேட்டை வருவாய் கிராமத்தில் கடலூர்-விருத்தாசலம் சாலையில் உள்ளது. இந்த இடத்தில் அனுமதியின்றி நுழைபவர்கள் மற்றும் அனுபவிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் ஜெசிபி இயந்திரம் கொண்டு நிலத்தை சுத்தம் செய்து, நடுவதற்கு காணிக்கல் கொண்டு வந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கோயில் நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காணிக்கல், கொட்டகை கட்டுவதற்கான கழி ஆகியவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், " கோயில் நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாக தகவல் வந்தது. நேரில் சென்றதால் அங்கிருந்து சென்றுவிட்டனர். கடந்த 30-ம் தேதி உயிரிழந்த ஒருவரின் உடலை கோயில் நிலத்தில் புதைத்துள்ளனர். இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறைக்கு புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது" என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்