திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. அந்த வகையில், மன்னார்குடியில் கடந்த ஓரிரு நாட்களாக மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி கனமழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago