தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன், அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்ததை திமுகவினர் மகிழ்ச்சியுடன் கொண் டாடி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத் தூர் நகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றதை தொடர்ந்து, திருப்பத்தூர் பஜார் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களும் இனிப்பு வழங்கி யும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே திமுக நகரம் சார்பில் நகர பொறுப்பாளர் சாரதிகுமார் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், மாதனூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதி களில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எ.வ.வேலு ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.சேத்துப்பட்டு, ஆரணி மற்றும் திருவண்ணாமலை உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும், அவர்கள் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago