திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 272 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 3 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 272 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 7,939-ஆக இருந்தது. கடந்த ஒரு மாதமாக கரோனாதொற்று பெருகி வந்ததால் நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 164 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில், 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் கரோனாவால் பாதிக்கப் பட்ட 132 பேர் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டி ருந்தனர். தற்போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது. திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம் பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
பெருகி வரும் கரோனா நோயாளிகளை காப்பாற்ற அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுகள் படுக்கை வசதியுடன் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மை தான். இதை கட்டுப்படுத்த முழு முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
பொது மக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. கடந்தமாதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாக இருந்தது. தற்போது, 54 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வந்த மக்களின் வருகை தற்போது குறைந்துள்ளது.
அதேபோல, கரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்பட்டுள் ளதால் கரோனா தொற்று இருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை உயிரிழப்பு என்பது அதிகமாக இல்லை. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடித்தால் கரோனா தொற்று படிப்படியாக குறையும்.
அரசு மருத்துவமனை களில் கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago