ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெரிசல் : கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக இருந்ததால் சார்-ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சின்னசேலம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தானியங்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். இதை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக புகார்கள் வந்ததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் காந்த் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக இருந்ததை கண்டு அதிகாரிகளை எச்சரித்தார்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக டோக்கன் முறையில் குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகளை அழைத்து எடைபோட அனுமதிக்க வேண்டும்.அனைவரும் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்