நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு நாட்களுக்கு முன் 105 நபர்களுக்கும், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 116 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக உதகை நகராட்சி சந்தையில் இயங்கி வரும் கடைகள் இன்று (மே 6) காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் சங்க செயலாளர் இச்சுபாய் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசம் என்பதாலும் வரும் நாட்கள் பண்டிகைக் காலம் என்பதாலும் கடை திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். கடை மூடப்பட வேண்டிய நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 2மணியாக அதிகரிக்க வேண்டும்.நகராட்சி மார்க்கெட்டில், கடை திறக்க நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஏ, பி முறையிலிருந்தும் முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago