கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 17,811 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 17,811 பேர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 282 பேரிடம் மொத்தம் அபராத தொகை ரூ. 32,61,300 வசூல் செய்யப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல்செல்வோர், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 4-ம்தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல்சென்ற 23,255 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.46 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத 181 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.90 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago