சிவகங்கை நகராட்சியில் - வாரச்சந்தை காய்கறி கடைகள் அகற்றம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை நகராட்சியில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் விதிகளை மீறி காய்கறி கடைகள் அமைத்த வியாபாரிகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அறிவுறுத்தி கடைகளை அகற்றினர்.

சிவகங்கை நகராட்சியில் புதன்கிழமை வாரச் சந்தை நடைபெறும். தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் வாரச்சந்தை நடைபெறுவதற்கு தடை விதித்துள்ளார். ஆட்சியர் உத்தரவையும் மீறி நேற்று அதிகாலையில் வாரச்சந்தையை முன்னிட்டு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. ஆட்டு வியாபாரிகள் மற்றும் ஆட்டுத் தரகர்கள் திரண்டனர். அங்கு கரோனா விதிகளை மீறி ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

அதேபோல், வாரச்சந்தை காய்கறி வியாபாரிகளும் விதிமீறி கடைகள் அமைத்தனர். இதனை போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து கடைகள் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித் தனர். மேலும் கடைகளை அகற்றுமாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர்.

அதனையும் மீறி கடைகள் அமைத்த வியாபாரிகளிடமிருந்து காய்கறிகளை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்