நெல்லையில் 4 பேர், குமரியில் 7 பேர் கரோனாவால் உயிரிழப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தில் 639 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 10, மானூர்- 46, நாங்குநேரி- 63, பாளையங்கோட்டை- 70, பாப்பாகுடி- 1, ராதாபுரம்- 20, வள்ளியூர்- 87, சேரன்மகாதேவி- 23, களக்காடு- 31. கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாளையங்கோட்டை மண்டலம்23-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் சந்நிதி தெருவில் கடந்த 2 வாரத்தில் 11 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் இந்த தெருவில் உள்ள வீடுகள், கடைகளில்கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாளையங்கோட்டை மார்க்கெட், தபால் நிலையம், வங்கிகள், அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 215 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 252 பேர்குணமடைந்தனர். இதுவரை 11 ஆயிரத்து 479 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 741 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,544 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 22,092 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 4,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு சளிமாதிரி எடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினசரி 400-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்கான 450-க்கும்மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், 1000-க்கும்மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுபாடு நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்