கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 5 கடைக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை மூடுவது, சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நகராட்சி சுகா தாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறு பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட் டம் வாங்கல் ஊராட்சி அலுவ லகம் அருகே முகக்கவசம் அணி யாதது, சமூக இடைவெளி கடைபி டிக்காதது உள்ளிட்ட விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைக்காரர்களான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி(26), வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த கணேசன்(34), கரூர் படிக்கட்டுத்துறையைச் சேர்ந்த சரத்குமார்(28), நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த பாலசுப் பிரமணியன்(25) ஆகியோர் மீது வாங்கல் போலீஸாரும், வெங்க மேடு அய்யப்பன் கோயில் எதிரே உள்ள பூக்கடைக்காரரான விஜயசங்கர்(46) மீது வெங்கமேடு போலீஸாரும் தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago