கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் ஒரு ஆக்சிஜன் யூனிட் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு அதி காரிகள் ஆய்வு செய்துள்ளதாக கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
கரோனா பாதிப்பில் வடமாநிலங்களை போன்ற நிலை தமிழகத்தில் இல்லை. இங்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டு, உடனடியாக முடிவுகள் தெரிவிக் கப்படுகின்றன.
இதனால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர இயலும். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கரோனா வார்டில் உள்ள 250 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வழங்கும் அளவுக்கு இருப்பு உள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் தயாரிப்பு யூனிட் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று(நேற்று) ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தினர், தேவையான ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். எனவே, யாரும் இதுதொடர்பாக அச்சப்பட தேவையில்லை என்றார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தினர், தேவையான ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago