சிறுமி பாலியல் வன்முறை வழக்குகளில் - 2 இளைஞர்களுக்கு ஆயுள் சிறை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சுரேஷ்(32). இவர், கடந்த 2019-ல் 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக் கினார். பின்னர், கருக்கலைப்பு செய்வதற்காக மாத்திரைகளையும் கொடுத்துள்ளார்.

கருச்சிதைவு ஏற்பட்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புதுக் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சிறுமிக்கு கருக் கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து, கருச்சிதைவு ஏற்படுத் திய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம், சிறுமி மற்றும் அவரது பெற்றோரை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதவிர, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட் டுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக அங்கவி ஆஜரானார்.

மற்றொரு வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ராஜீவ்காந்தி (28). டெய்லரான இவர், ஒரு சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கீர னூர் மகளிர் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராஜீவ் காந்திக்கு ஆயுள் தண் டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்