திருப்பத்தூரில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த 3 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் நேற்று 'சீல்' வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பெருகி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதில், கரோனா விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு வருவாய் மற்றும் காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகராட்சிஆணையாளர் சத்தியநாதன் தலைமையிலான வருவாய்த் துறையினர் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதில், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி கூட்டுச்சாலையில் இயங்கி வரும் ரெடிமேட் கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட 3 கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வருவாய்த் துறையினர் கரோனா விதிமீறிய 3 கடைகளுக்கு ‘சீல்' வைத்தனர். அதேபோல, திருப்பத்தூர் நகர காவல் துறையினர் திருப்பத்தூர்- தருமபுரி கூட்டுச்சாலை யில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும், அல்வழியாக ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றி வந்த 5 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago