செங்கை மாவட்டத்தின் - 113 வேட்பாளர்களில் 99 பேர் டெபாசிட் இழந்தனர் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட 113 வேட்பாளர்களில் 99 பேர்டெபாசிட் தொகையை இழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என 7 சட்டப்பேரவை தொகுதிகள்உள்ளன. இதில் தாம்பரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள், பல்லாவரம் - 22, சோழிங்கநல்லூர் - 26, செங்கல்பட்டு -13, திருப்போரூர் - 11, செய்யூர் (தனி) - 9, மதுராந்தகம் (தனி) -10 என மொத்தம் 113 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும்அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தவிர, பிற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சொல்லும்படியாக வாக்குகளை பெறவில்லை. மேலும் அவர்களில் 99 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர்.

அதே சமயத்தில் நாம் தமிழர் கட்சி 7 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றதுடன், 6 இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தாம்பரம் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ்உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் சொற்பவாக்குகளையே பெற்றனர்.மாவட்ட அளவில் சுயேச்சை களும் ஜொலிக்கவில்லை. சில வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்