குமரியில் கரோனாவுக்கு 9 பேர் மரணம் : நெல்லை, தென்காசி, தூத்துக்குடியிலும் பாதிப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று129 பேருக்கு கரோனா தொற்றுகண்டறியப்பட்டது. இதன் மூலம்கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 227 பேர் குணமடைந்தனர். இதுவரை 11 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 719 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,987 பேர் குணமடைந்தனர். இதுவரை 22 ஆயிரத்து 503 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 4,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 358 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 25,796 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 381 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 21,648 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் 3,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் மரணமடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 420 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 9 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 பேரை கடந்துள்ளது.

தொற்று பரவாமல் இருக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 719 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,987 பேர் குணமடைந்தனர். இதுவரை 22 ஆயிரத்து 503 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்