அரசு மருத்துவமனையில் அனைத்து அறைகளிலும் - புகை கண்டுபிடிப்பான் கருவிகள் பொருத்த வேண்டும் : பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு துறை பணியாளர்கள் முன்னிலையில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், கரோனா சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் ஆக்சிஜன் சப்ளை குழாய்களில் கசிவு இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் இறக்கின்றனர்.

எனவே அனைத்து அறைகளிலும் புகை கண்டுபிடிப்பான் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள தீ தடுப்பு சாதனங்களை பயன்படுத்துவது குறித்து பணியாளர்களுக்கு காலமுறை பயிற்சி அளிக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் நல்லமுறையில் இருக்கின்றனவா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மின்கசிவு, ஆக்சிஜன் கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து நோயாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது.

பின்னர், விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், விபத்துகளின்போது எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்