சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 5 ஆண்டு சிறை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள வேலூரைச் சேர்ந்தவர் சின்னக்காளை என்ற ஏ.சேவுகன்(65). இவர், ஒரு சிறுமிக்கு கடந்த ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைக் தொடர்ந்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட சேவுகனுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்