வட மாநிலங்களான ஜார்க்கண்ட், பிஹார், ஒடிசா உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, நீலகிரி மாவட்டத்துக்கு வந்து வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கி தேயிலை தோட்டத் தொழில், கட்டுமானப் பணிகள், உணவகங்கள் என பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்வதிலும், பரிசோதனை செய்வதிலும் ஏதேனும் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறித்த பிரச்சினைகள் இருந்தாலோ, அவற்றை குன்னூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்க அலுவலகத்தில் 0423-2232108, குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையரான நோடல் அதிகாரி சதீஷ்குமாரை 63835-73843, கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் நவீன் கிருஷ்ணாவை 98409-63838, குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணியை 89401-81539 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கும் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago