குறிஞ்சிப்பாடி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக என்னை அறிவித்து, தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago