ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் மொத்தம் போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் முதல் 2 இடங்களைப் பெற்ற அதிமுக, திமுக, பாஜக, காங் கிரஸ் வேட்பாளர்களைத் தவிர 64 வேட்பாளர்கள் டெபாசிட் இழந் தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட்டை (முன் வைப்புத்தொகை) திரும்பப் பெற முடியும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை ஆகிய தொகுதியில் தலா 15 வேட்பாளர்களும், ராமநாத புரத்தில் 19 வேட்பாளர்கள், முது குளத்தூரில் 23 வேட்பாளர்கள் என மொத்தம் 72 பேர் போட்டி யிட்டனர்.
இதில் 34 பேர் அங்கீகரிக்கப் பட்ட மற்றும் பதிவு பெற்ற கட்சி களின் வேட்பாளர்கள், மீதி 37 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர்.
பரமக்குடி (தனி) தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,82,158. இதில் டெபாசிட் பெற வேண்டும் என்றால் 30,360 வாக்குகள் பெற வேண்டும். இதன்படி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முருகேசன் மற்றும் 2-ம் இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் ஆகியோர் மட்டுமே டெபாசிட் பெற்றுள்ளனர். தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 13 பேர் டெபாசிட் இழந்தனர்.
திருவாடானை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 201815. இதில் டெபாசிட் பெற 33636 வாக்குகள் பெற வேண்டும். அமமுக வேட்பாளர் 33 ஆயிரத்து 426 வாக்குகளே பெற்றுள்ளார். ஆகவே அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந் தனர்.
ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 214098 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 35683 வாக்குகள் பெற்றால் டெபாசிட் பெறலாம். அதனடிப்படையில் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 17 வேட் பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
முதுகுளத்தூர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 220083. இதுில் 36680 வாக்குகள் பெற்றால் டெபாசிப் பெற முடியும். இங்கு அமமுக, நாம் தமிழர், சமக உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
மாவட்டத்தில் நான்கு தொகுதி களிலும் மொத்தம் 64 பேர் டெபாசிட் இழந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago