பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளையும் - திமுகவிடம் அதிமுக பறிகொடுக்க காரணம் என்ன? :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் (தனி) ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த முறை அதிமுக வசமிருந்த இந்த 2 தொகுதிகளையும் இந்த முறை திமுக கைப்பற்றியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக வின் தோல்விக்கு காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறியது:

பெரம்பலூர்(தனி) தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்க ளில், கடந்த 2011, 2016 ஆகிய இரு முறையும் அதிமுகவின் இரா.தமிழ்ச்செல் வனும், குன்னம் தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக மாவட்டச் செயலா ளரான ஆர்.டி.ராமச்சந்திரனும் எம்எல்ஏக் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக் களாக இருந்தபோதும், தொகுதியில் மக்கள் நலனுக்காக குறிப்பிடும்படியான பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை எனும் அதிருப்தி தொகுதி முழுக்க இருந்தது. மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களான சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, கரோனா தொற்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேர்தலுக்கு முன்பு பெரம்பலூருக்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமி, “இரண்டே சட்டப்பேரவைத் தொகுதிக ளைக் கொண்டுள்ள சிறிய மாவட்டமான பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறுகள் இல்லை” என்றார். இதனால், அதிமுக மீது பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும், விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் மழைநீரையே பெரிதும் நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால், மழைநீரை சேமித்து பாசனத் துக்கு பயன்படுத்தும் வகையில், வேப்பந்தட்டை அருகே சின்னமுட்லு எனும் இடத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அந்த திட்டத்தை நிறைவேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முனைப்பு காட்டியதாக தெரியவில்லை.

மிக முக்கியமாக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங் களை ஆதரித்து வந்ததால், அதிமுக மீது விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இவ்வாறு அதிமுகவுக்கு எதிரான பல்வேறு காரணங்களை வைத்திருந்த இம்மாவட்ட வாக்காளர் கள், சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் வாக்குகள் மூலம் அதிருப்தியை வெளிப் படுத்திவிட்டனர் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்