கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்சினைக ளுக்கு தீர்வுகாண பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் துறை சார்பில் அலுலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணியன், இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழி லாளர்கள் பிரச்சினைகளின்றி தங்குதல், அவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க மண்டல அலுவ லராக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் (9788482591), அலுவலர் களாக ஜெயராஜ், சாந்தி (97894 72234, 7871148291) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வெளிமாநில தொழி லாளர்கள் தங்களுக்குள்ள இடர்பாடுகளுக்கு தீர்வு காண இந்த அலுவலர்களை செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் திலுள்ள ஒருங்கிணைந்த தொழி லாளர் துறை அலுலகத்தை 04328-274722 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில்...
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங் களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை களின்றி தங்குவதற்கும், அவர் களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களுக்கு தீர்வு காணவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறை உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாவட்ட கண் காணிப்பு அலுவலராக தொழிலா ளர் உதவி ஆணையர் கு.விமலா (9942832724), குழு உறுப்பி னர்களாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் ரா.குருநாதன் (9629494492), முத்திரை ஆய்வா ளர் ராஜா(7904250037) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் களை செல்போன் எண்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago