கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி யில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிட்டார்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் முஸ்லிம்கள் 90 சதவீதம் வசிக்கின்றனர். இங்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சியினர் யாரும் வரக்கூடாது என ஜமாத்தார் அறிவித்ததாகவும், ஒரு கட்சியினருக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும், ஆனால் பள்ள பட்டிக்குச் செல்ல தங்களுக்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்றும் கூறி பள்ளபட்டியில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அவரை ஆதரித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் முடிவில் அண்ணாமலைக்கு 68,816 வாக்குகள் கிடைத்த நிலையில், அவரைவிட 24,816 வாக்குகள் கூடுதலாக பெற்று, திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ வெற்றி பெற்றார்.
முன்னதாக, நேற்று முன்தினம் 31 சுற்றுகளாக நடைபெற்ற இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் 3, 13, 14, 16, 17, 20, 22, 23 ஆகிய 8 சுற்றுகளில் திமுக வேட்பாளரைவிட அண்ணாமலைக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மற்ற சுற்றுகளில் இளங்கோ வுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தது. இதில், பள்ளபட்டி பேரூராட்சி பகுதி வாக்குகள் எண்ணப்பட்ட 24, 25, 26, 27, 28 ஆகிய சுற்றுகளில் முறையே அண்ணாமலைக்கு 1,595- 154- -153- 44- 469 என 2,615 வாக்குகளும், இளங் கோவுக்கு 3,487- 4,419- 4735- 4,180- 3,792 என 20,613 வாக்குகளும் கிடைத்தன. எனவே, பள்ளப்பட்டியில் கிடைத்த குறைந்த வாக்குகளே அண்ணாமலை தோல்விக்கு முக்கிய காரணமானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago