காஞ்சி, செங்கையில் மே தின கொண்டாட்டம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் சார்பில் நேற்று மே தின விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவிலிமேடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் நகரப் பொருளர் பா.ஸ்டாலின் கொடியேற்றி, உரை நிகழ்த்தினார். செவிலிமேடு கிளைச் செயலர் எஸ்.வி.சங்கர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி செயலர் ஜெ.கமலநாதன், காஞ்சிபுரம் சட்டபேரவைத் தொகுதி துணைச் செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் சி.சங்கர் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்டச் செயலர் முத்துக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் நத்தப்பேட்டை, பிள்ளையார்பாளையம், திருக்காளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மே தின விழா நடைபெற்றது.

செங்கல்பட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலர்இ.சங்கர், நகராட்சி அலுவலகம் முன் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத் தலைவர் மூத்த வேதகிரி, செங்கல்பட்டு பெயின்டர்கள் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை ஆட்டோ நிறுத்தம் அருகில்சங்கத் தலைவர் என்.அன்பு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

இதேபோல, செங்கல்பட்டு மீன் மார்க்கெட்டில் சாலையோர வியாபாரிகள் சங்கக் கொடியை, முறைசாரா சங்க பகுதி செயலர் யோபுராஜ் ஏற்றினார். குண்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன் கொடியேற்றினார்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்