விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள வித்யா பொறியியல் கல்லூரியில் இன்று (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
ராஜபாளையம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 340 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளில் 25 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.
இதேபோன்று, வில்லி புத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 357 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 26 சுற்றுகளாகவும், சாத்தூர் தொகுதியில் 351 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 26 சுற்றுகளாகவும், சிவகாசி தொகுதியில் 368 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 27 சுற்றுகளாகவும் எண்ணப்படுகின்றன.
விருதுநகர் தொகுதியில் 325 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 24 சுற்றுகளாகவும், அருப்புக்கோட்டை தொகுதியில் 311 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாவும், திருச்சுழி தொகுதியில் 318 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாவும் எண்ணப்பட உள்ளன.
அதோடு வில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி தொகுதிகளில் பதிவான அஞ்சல் வாக்குகள் தலா 5 மேஜைகளிலும், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளுக்கு தலா 4 மேஜைகளிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் பென்சில், பந்துமுனை பேனா, வெள்ளை காகித தாள், 17-சி படிவ நகல், ரப்பர் மட்டும் கொண்டுவர அனுமதி உண்டு. அதோடு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டு நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றுகளுடன் வர வேண்டும். அல்லது, இருமுறை கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றுடன் வரவேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago