நெல்லை மாவட்டத்தில் 862 பேருக்கு தொற்று - தென்மாவட்டங்களில் கரோனாவுக்கு 12 பேர் மரணம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில்6 பேர் உயிரிழந்தனர். 862 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி மாநகரபகுதிகளில் மட்டும் 436 பேரும்,வட்டாரம் வாரியாக அம்பாசமுத்திரம்- 43, மானூர்- 54, நாங்குநேரி-25, பாளையங்கோட்டை- 87, பாப்பாகுடி- 17, ராதாபுரம்- 21, வள்ளியூர்-51, சேரன்மகாதேவி- 58, களக்காட்டில் 70 பேரும் நேற்று பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை25,416 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,209 பேர்குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 473 பேர் குணமடைந்தனர். 4,967 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று245 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் மொத்தஎண்ணிக்கை 12 ஆயிரத்து 74 ஆகஉயர்ந்துள்ளது. நேற்று 236 பேர் உட்பட இதுவரை 10 ஆயிரத்து 468 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்த உயிரிழப்பு 178 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலால் உயிரிழப்பு அதிகரித்து வருவது அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 638 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,045 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 384 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20,090 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 5,44,050 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இதுவரை 21,800 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளச்சல் சட்டப் பேரவை தொகுதிபாஜக வேட்பாளர் ரமேஷ் உட்பட 302 பேருக்கு நேற்று கரோனாபாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின் தாக்கம் குறைவாக உள்ளவர்கள் விருப்பத்தின் பேரில் வீடுகளில் தனிமையில் உள்ளனர். மாவட்டத்தில் நேற்று மட்டும் கரோனாவால் 3 பேர் உயிரிழந்தனர்.

தற்போது 1,716 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மட்டும் 473 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களி்ல படுக்கைகள் நிரம்பி வழிவதால் கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்