ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, காட்பாடியில் உள்ள சட்டக்கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி, வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரி என 5 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட வுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 70 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 57 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 54 வேட்பாளர்கள் என மொத்தம் 181 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரக்கோணம் தொகுதியில் 74.89 சதவீதம், சோளிங்கர் தொகுதியில் 80.09 சதவீதம், ராணிப்பேட்டை தொகுதியில் 77.2 சதவீதம் ஆற்காடு தொகுதியில் 79.62 சதவீதம், காட்பாடி தொகுதியில் 74 சதவீதம், வேலூர் தொகுதியில் 70.25 சதவீதம், அணைக்கட்டு தொகுதியில் 77.05 சதவீதம், கே.வி.குப்பம் தொகுதியில் 76.50 சதவீதம், குடியாத்தம் தொகுதியில் 72.56 சதவீதம், வாணியம்பாடி தொகுதியில் 75.55 சதவீதம், ஆம்பூர் தொகுதியில் 74.01 சதவீதம், ஜோலார்பேட்டை தொகுதியில் 80.98 சதவீதம், திருப்பத்தூர் தொகுதியில் 76.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவுள்ளது. காலை 8.30 மணியளவில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 14 மேஜைகளில் மின்னனணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கவுள்ளன. சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகளின் எண்ணிக்கை இருக்கும்.
அதன்படி, அதிகபட்சமாக 408 வாக்குச்சாவடிகள் கொண்ட குடியாத்தம் (தனி) தொகுதியில் 29 சுற்றுகள் வீதம் எண்ணப்பட வுள்ளன. குறைந்தபட்சமாக 311 வாக்குச்சாவடிகள் கொண்ட கே.வி.குப்பம் தொகுதியில் 22 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன. அரக்கோணம் தொகுதியில் உள்ள 317 வாக்குச்சாவடிகளுக்கு 23 சுற்றுகள், 387 வாக்குச்சாவடிகள் கொண்ட சோளிங்கர் தொகுதியில் 28 சுற்றுகள், 375 வாக்குச்சவாடிகள் கொண்ட ராணிப்பேட்டை தொகுதியில் 27 சுற்றுகள், 349 வாக்குச்சாவடிகள் கொண்ட காட்பாடி தொகுதியில் 25 சுற்றுகள், 364 வாக்குச்சாவடிகள் கொண்ட வேலூர் தொகுதியில் 26 சுற்றுகள், 351 வாக்குச்சாவடிகள் கொண்ட ஆம்பூர் தொகுதியில் 25 சுற்றுகள், 361 வாக்குச்சாவடிகள் கொண்ட வாணியம்பாடி தொகுதி யில் 26 சுற்றுகள், 335 வாக்குச்சாவடிகள் கொண்ட ஆம்பூர் தொகுதியில் 24 சுற்றுகள், 340 வாக்குச்சாவடிகள் கொண்ட ஜோலார்பேட்டை தொகுதி மற்றும் 335 வாக்குச்சாவடிகள் கொண்ட திருப்பத்தூர் தொகுதியில் தலா 24 சுற்றுகள் வீதம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago