திருப்பூர், நீலகிரி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் - வாக்குகள் எண்ணும் பணியில்சுழற்சி முறையில் 583 அலுவலர்கள் :

By செய்திப்பிரிவு

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலுள்ள 8சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் உட்பட583 பேருக்கு நேற்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளுக்குரிய வாக்கு எண்ணும் பணி, திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ளஎல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் நாளை காலை8 மணி முதல் நடைபெறவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள்அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு கணினி மூலமாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இதற்கென திருப்பூர் மாவட்டத் துக்காக நியமிக்கப்பட்டுள்ள பொதுபார்வையாளர்களான சந்தர் பிரகாஷ்வர்மா (அவிநாசி), கபில் மீனா(உடுமலைப்பேட்டை), நரேந்திர குமார்மந்த்ரி (மடத்துக்குளம்) ஆகியோர்முன்னிலையிலும், மாவட்ட தேர்தல்அலுவலரும்,ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில், 8 சட்டப்பேரவைத்தொகுதி களில் வாக்கு எண்ணும் பணியைமேற்கொள்ள உள்ள 136 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், 136 உதவியாளர்கள் மற்றும் 152 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 424அலுவலர்களுக்கு கணினி மூலமாகமாவட்ட ஆட்சியர் பணி ஒதுக்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவண மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உதகை

இதேபோல நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையிலும், தேர்தல் பார்வையாளர்கள் பனுதர் பெஹரா, சவ்ரவ் பஹரி முன்னிலையிலும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களை சுழற்சி முறையில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.பின்னர் ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது,‘‘நீலகிரி மாவட்டம் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குதலா 14 மேஜைகளுக்கு 14 வாக்குஎண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 14 உதவியாளர்கள், 14 நுண் பார்வையாளர்கள் மற்றும் கூடுதலாக20 சதவீதம் அலுவலர்கள் என 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்51 வாக்குஎண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 51 உதவி யாளர்கள், 57நுண்பார்வையாளர்கள் என மொத்தம்159 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்