கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் : மதுபாட்டில்கள் கடத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டுமென பல்லடத்தில் மதுபாட்டில்கள் கடத்தியபெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகை வரைவோலையாக நேற்று செலுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. மாவட்டநிர்வாகத்தின் உத்தரவுப்படி, வாக்குப் பதிவுக்கு முன்பாகவே திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், பல்லடம்நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த அங்கமுத்து மனைவி அங்காத்தாள் (40) என்பவரது வாகனத்தைநிறுத்தி சோதனையிட்டனர். அதில், விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 22 மதுபாட்டில்கள்பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு பல்லடம் குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த 28-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், அங்காத்தாளுக்கு ரூ.50 ஆயிரம்அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் ஹரிராம் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், அபராதத் தொகையை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பெயரில்வரைவோலையாக எடுத்து கரோனா நோயாளிகள் சிகிச்சை செலவுக்காக பயன்படுத்த அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ரூ.50,000-க்கான வரைவோலையை திருப்பூர்அரசு மருத்துவமனை டீன் வள்ளிசத்தியமூர்த்தியிடம் நேற்று அங்காத்தாள் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்