கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 77 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12,571 பேருக்கு தொற்றுஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் கடலூர்மாவட்டத்தில் நேற்று 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 30,147 பேருக்கு தொற்றுஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 377 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18,935 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, நேற்று 205 பேர் உட்பட 16,923 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் நகரில் கரோனா பரவல் அதிகமாவதை கட்டுப்படுத்தும் வகையில், காமராஜர் வீதி, சங்கரமடத்தெரு, நந்தனார் தெரு, சகுந்தலா நகர், மகாராஜபுரம், சுபிக்ஷா கார்டன், கணபதி நகர் ஆகிய 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வெளிநபர் உள்ளேநுழையஅனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago