சிவகங்கை மாவட்டத்தில் கழிவறையே இல்லாத வீடுகளில் கழிவறை கட்டியதாக கணக்கு காட்டப்பட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து, பயனாளிகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
தூய்மை பாரதத் திட்டத்தில் தனி நபர் இல்லக் கழிவறை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மானியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு ரூ. 7,200, மாநில அரசு ரூ.4,800 வழங்குகிறது. இந்நிலையில் இளையான்குடி அருகே அரணையூர் ஊராட்சி பெருமானேந்தல் கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை கட்டாமலேயே கழிவறை கட்டியதாகக் கணக்கு காட்டப் பட்டுள்ளது. இதேபோல், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டியதில் மோசடி நடந்துள்ளதாக பெருமானேந்தலைச் சேர்ந்த சேகர் என்பவர் தமிழக முதல்வர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பினார். இந்தப் புகார் குறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் கழிவறைகளை கட்டிய பயனாளிகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை ஒன்றியத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பயனாளிக ளுக்கு கழிவறை கட்டிய மானியம் வழங்கவில்லை. இதனால் உண்மை யாக கழிவறை கட்டியவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். விரைந்து விசாரணை நடத்தி முறையாக கழிவறை கட் டியவர்களுக்கு மானியம் வழங்க வேண் டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட் டம் முழுவதும் கழிவறை முறையாகக் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதனால் பயனாளிகளுக்கு மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago