சிவகங்கையில் ஆய்வுக்கு வந்த நகராட்சி அதிகாரிகளுக்கு பயந்து வாடிக்கையாளர்களை உள்ளே வைத்து பூட்டிய ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கரோனா 2-வது அலை பரவலால் ஜவுளிக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிவகங்கையில் சிலர் விதிகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று காலை அரண்மனைவாசல், தெற்கு ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிலர் ஜவுளிக்கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தனர்.
இதையடுத்து விதிமீறிய 2 கடைகளுக்கு அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தெற்கு ராஜவீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில், அதிகாரிகளை பார்த்ததும் வாடிக்கையாளர்கள், பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டினர். அதிகாரிகள் பலமுறை கேட்டும் யாரும் கடையில் இல்லை என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். ஆனால், கடைக்குள் ஆட்கள் இருப்பதை உறுதிசெய்த அதி காரிகள் அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கடையைத் திறந்தபோது கடையில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் வெளியே வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இதுகுறித்து ஆட் சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்படி ஜவுளிக் கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago