‘உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’ :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் தலைமையில், வேளாண்மை உதவி இயக்குநர் பஷிரியா பேகம், வேளாண்மை அலுவலர் கற்பகம் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உரக் கடைகளில் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ராதாகிருஷ் ணன் கூறியது:

சில்லறை உர விற்பனையாளர்கள் உரங்களின் இருப்பு விவரம் மற்றும் உர பைகளில் உள்ள அதிகபட்ச விலையின் விவரம் ஆகியவற்றை அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் நாள்தோறும் எழுதி வைக்க வேண்டும். உர விற்பனை உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் அனுமதி பெற்ற உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களை அதிக விலைக்கு விற்றாலும், அனுமதி பெறாத உரங்களையோ அல்லது உரம் சம்பந்தப்பட்ட பொருட்களையோ, தரமில்லாத உரங்களையோ விற்பனை செய்தால் உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உரம் சம்பந்தப்பட்ட புகார்கள் இருப்பின், அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், இணை இயக்குநர் அலுலகத்தில் உள்ள உதவி இயக்குநரிடமும் (தரக்கட்டுப்பாடு) தெரிவிக்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்