திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த 208 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 10,031-ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 66 வயதுள்ள ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 140 -ஆக உயர்ந்துள்ளது.
எனவே, கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சத்தை தொட்ட கரோனா 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குறைந்தது. இந்நிலையில், கரோனா 2-வது அலை தற்போது மாநிலம் முழுவதும் அதிக அளவில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது வேதனையளிக்கிறது.
இதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை முகாம் களை அதிகரிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 5.62 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் கல்வி நிறுவனங்கள் என 11 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு 1,159 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்க வேண்டும். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை வழங்க வேண்டும். மே2-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகளில் உள்ளாட்சித் துறையினர் ஈடுபட வேண்டும்.
மேலும், கரோனா பரவலை தடுக்க மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதாரத் துறையினர், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறையினர் கொண்ட 208 குழுக்கள் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் யார்? தடுப்பூசி போட்டுக்கொண் டவர்கள் யார்? காய்ச்சல் அறிகுறி, உடல் வெப்ப பரி சோதனை, கரோனா பரிசோதனை ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago