வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது :

By செய்திப்பிரிவு

பொது சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 84.92 லட்சம் மோசடி செய்த இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பொது சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், சென்னை தலைமையகத்தில் உள்ளவர்களிடம் பேசி வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, திருப்பூர் மாநகரப் பகுதியில் வசித்து வந்த பலரிடம் கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் ரூ.84.92 லட்சம் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டு. இதுதொடர்பாக, சேலம் மாவட்டம் பொன்னம்மாபட்டியைச் சேர்ந்த சதீஷ் (எ) சதீஷ் ராஜா (38), பிரேம்குமார் (36) ஆகிய இருவரை கடந்த மார்ச் 12-ம் தேதி திருப்பூர் மாநகர, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இருவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேற்று போலீஸார் வழங்கினர்.

திருப்பூர் மாநகரில் பல்வேறு குற்றங்களுக்காக, இதுவரை 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்