வாக்கு எண்ணும் மையத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கை - சுகாதாரத் துறை அலுவலர்களுடன் நாமக்கல் ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை கண்காணிப்பு அறையில் உள்ள டிவிக்கள் மூலமாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கா.மெகராஜ் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படவுள்ள கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்