தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைஇல்லை என அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்தும், வயதுமுதிர்ந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, கிளைத் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago