சிவகங்கையில் ஆதரவற்ற மனநலம் பாதித்தோருக்கான சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் (இசிஆர்சி) 2020 டிச.22 முதல் மத்திய, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் ஐஎம்எச் மற்றும் தி பேனியன் தன்னார்வ நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மானாமதுரை ரயில் நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தைச் சோ்ந்த நைலாகாதிம் (25) என்ற பெண் மனம்நலம் பாதித்துச் சுற்றித்திரிந்தார். அவரை மீட்டு சிவகங்கை இசிஆர்சி மையத்தில் வைத்து 18 நாட்கள் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைந்த நிலையில் தனது பெற்றோர் விவரத்தைத் தெரிவித்தார்.
இதையடுத்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் களிடம் நைலாகாதிம் ஒப்படைக் கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் மருத் துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து இசிஆர்சி மைய பொறுப்பாளர்கள் கூறுகையில், இதுவரை 14 பேர் குணமடைந்துள்ளனர். 36 பேர் சிகிச்சையில் உள்ளனர். சாலை களில் சுற்றித்திரியும் ஆதரவற்ற மனநலம் பாதித்தோரைக் கண்ட றிந்து சிகிச்சை அளிக்கிறோம். மாவட்டத்தில் மனநலம் பாதித் தோரைக் கண்டறிந்தால் உடனடி யாக 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago