திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள 12,625 கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அரசு திட்டப்பணிகள், ஆவணப் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் தொற்று பகுதிகளில் ஸ்வாப் பரிசோதனை எடுக்க மக்களை அழைத்து வருவது, தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி, வெளியூர்களிலிருந்து வருவோரை கணக்கெடுக்கும் பணி ஆகிய கூடுதல் பணிச்சுமையால் ஊராட்சி செயலாளர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
ஊராட்சி செயலாளர்களின் பணிச்சுமையை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago