ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற உத்தரவு : இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு

By செய்திப்பிரிவு

கரோனா தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மார்ச் 22-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணி இல்லை என்பதால் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று மே 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கு வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து வழங்கிடவும், பிற வகுப்பு மாணவர் களுக்கு பாடங்களை கல்வி தொலைக் காட்சி வாயிலாகவும், அலைபேசி,வாட்ஸ்-அப் அல்லது பல்வேறு செயலி வழிகளில் ஆலோசனைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் இந்த அறிவிப்புக்கு இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்