மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரின் அறிவுறுத்தலின்படி, திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிநாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் போன்று வேடமணிந்தும், தங்களது உடலில் கரோனா வாசகம் அடங்கிய பதாகைகளை தொங்கவிட்டும், பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போடுவதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வுஏற்படுத்தினர். முன்னதாக, ஆட்சியர்க.விஜயகார்த்திகேயனை சந்தித்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அளித்தனர். மாணவர்களின் செயல்பாட்டை ஆட்சியர் பாராட்டினார். அதைத்தொடர்ந்து, மாணவர் செயலர் சந்தோஷ், சந்தீப், தமிழ்குருமூர்த்தி, கிருபாகரன் ஆகியோர், ஆட்சியர் அலுவலகம்முன்பு முகக் கவசம் அணியாதவர்களை முகக் கவசம் அணிய வைத்து, அதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago