மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு வழங்க வேண்டிய தொகைக்காக ரூ.2.50 லட்சம் லஞ்சம் வாங்கியநாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் உதவி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனர் .
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வழங்க ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும்,என நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜான்சி மற்றும் உதவி அலுவலர் சேகர் ஆகியோர் பள்ளி நிர்வாகி விஜயகுமாரிடம் கேட்டு நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறப் படுகிறது.
லஞ்சம் வழங்க மனமில்லாத விஜயகுமார் இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புபோலீஸில் புகார் செய்தார். இதை யடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுக்க சேலம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நாமக்கல் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்ஜான்சி வீட்டிற்கு விஜயகுமார் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஜான்சி மற்றும் உதவி அலுவலர் சேகர் ஆகியோர் ரூ.2.50 லட்சம் பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் மாவட்டலஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago