குமாரபாளையம், பவானியைச் சேர்ந்த திருநங்கைகள் சார்பில் கூத்தாண்டவர் திருவிழா குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு திருவிழா நடத்தப்படவில்லை. எனவே, குமாரபாளையம், பவானி திருநங்கைகள் சார்பில் கூத்தாண்டவர் திருவிழா குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் குருவானமாதம்மாள் அனைத்து திருநங்கைகளுக்கும் மாங்கல்யம் கட்டினார். தொடர்ந்து நேற்று காலை கூத்தாண்டவர் திருவுருவ சிலையுடன் ஊர்வலமாக காவிரிஆற்றுக்குச் சென்ற திருநங்கைகள் திருமாங்கல்யத்தை அகற்றிவிட்டு புனித நீராடினர். இதில் குமார பாளையம், பவானியைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago