இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம் தெரிவிப்பதற்காக கேபிள் மூலம் அளிக்கக் கூடிய இணைய இணைப்புகளை வழங்குமாறு தேசிய தகவலியல் மைய அதிகாரிகள், பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர்.
ஆனால், பிஎஸ்என்எல் அதிகாரிகளோ, கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக வைஃபை கருவிகளை நேற்று வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த தேசிய தகவலியல் மைய அதிகாரிகள், வைஃபை கருவிகளை திருப்பி அனுப்பினர்.
அப்போது அங்கு இருந்த திமுக வேட்பாளர்களின் முகவர்கள், ‘வைஃபை கருவிகளை எதற்காக கொண்டு வந்தீர்கள்’ என கேட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள், போலீஸார் உரிய விளக்கங்களை அளித்து, சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago