திருநாவலூர் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம், மூன்றாம் பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியை இளங்கோதை வழங்கினார். இதற்கான விழாவில் திருநாவலூர் வட்டார வள மையமேற்பார்வையாளர் சக்திவேல்,ஆசிரியர் பயிற்றுநர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்