சிதம்பரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டுக்கு 11 மின்விசிறிகளை வர்த்தக சங்கத்தினர் வழங்கினர்.
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு சரியான காற்று வசதி இல்லாததால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கர் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் கூறினார். சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் இதுகுறித்து தெரிவித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் 11 மின்விசிறி மற்றும் அதற்கான உபகரணங்களையும் அரசு மருத்துவர்களிடம் வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் -ஆட்சியர் மதுபாலன் மற்றும் சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் கரோனா வார்டில் உள்ளநோயாளிகளுக்கு நல்ல காற்று வசதி கிடைக்கும் என்றனர் மருத்துவர்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago