செஞ்சி அருகே அரசு ஜீப் மோதியதில் காயமடைந்த மாணவி உயிரிழந்தார்.
செஞ்சி வட்டாட்சியர் ராஜன்கடந்த 25-ம் தேதி அரசு ஜீப்பை பாலப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டி சென்றார். அப்போது சாலையோரமாக நடந்து சென்ற 10-ம் வகுப்பு மாணவியான, பாலப்பட்டு குணசேகரன் மகள் மணிமேகலை(15) மீது ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை நேற்று உயிர்இழந்தார். இதுகுறித்து அனந்தபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago